2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; மூன்று பிள்ளைகளின் தந்தை கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதான நபரொருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பூண்டுலோயா கயப்புகலை பேன்லன்ஸ் தோட்டத்தை சோந்த ஒருவரையே பூண்டுலோயா பொலிசார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது .

பூண்டுலோயா கயப்புகலை பேன்லன்ஸ் தோட்டத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். க.பொ.த சாதாரண தரம் வரை கல்விபயின்ற இவர் மின்சார உபகரணங்கள் திருத்துதல் உட்பட சிறு தொழில்களை செய்துவந்துள்ளார்.

அத்துடன் மாலை வேலையில் சிறுவர்களுக்கு கயப்புகலை பேன்லன்ஸ் தோட்டத்தில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பதையும் வழமையாக கொண்டுள்ளார்.

இதன்போதே 10 வயது சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பொலிசார் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X