2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாரம் தூக்கி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சாமிமலை  தோட்டத்தில் பாரம் தூக்கிபள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வெட்டப்பட்ட மரங்களை ஏற்றிசெல்வதற்காக சென்ற பாரம் தூக்கியே ஓல்டன் தோட்டத்தில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் பயணம் செய்த வாகன சாரதி உட்பட 5 பேர் படுங்காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .