2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பூணாகலை விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 07 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கோகுலன்

பண்டாரவளை-பூணாகலையில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துடன் தொடர்புடைய சாரதியை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த குறித்த பஸ்ஸின் சாரதியான எஸ்.பீ.நீல் பிரியந்த பண்டாவளை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

சுகமடைந்த அவர் வைத்தியசாலையை விட்டு இன்று வெளியேறும் போதே பொலிஸார் அவரை கைது செய்தனர்.

பண்டாரவளையிலிருந்து பூணாகலையை நோக்கி கடந்த 4 ஆம் திகதி திங்கட்கிழமை பயணித்த மேற்படி பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியானதுடன் 26 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .