2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போலி நோட்டுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.கிஷாந்தன்


ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாளை தாளை வங்கியில் வைப்பில் இட்ட ஒருவரை ஹட்டன் பொலிஸார் இன்று பிற்பகல் கைதுசெயதுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை ஹட்டனிலுள்ள  இலங்கை வங்கி கிளையில் குறித்த நபர் தனது கணக்கில் வைப்பிலிட சென்றுள்ளார். இதன் பிறகு இவரால் வைப்பிலிடப்பட்ட பணத்தாள்களை வங்கி ஊழியர்கள் பரிசீலித்துப் பார்த்தபோது அதில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் ஹட்டன் குற்றத்தடுப்பு  பொலிஸ்பிரிவுக்கு  முறையிட்டதனைத் தொடர்ந்து  விரைந்து செயல்பட்ட பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து மேற்படி நபரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .