2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிள்ளைகளின் உதவியுடன் ஹெரோயின் விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தனது 3 பிள்ளைகளின் உதவியுடன் ஹெரோயின் விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று சனிக்கிழமை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பணம் திருடி அப்பணத்தைக் கொண்டு  ஹெரோயின்  கொள்வனவு செய்து தனது 3  பிள்ளைகளின் உதவியுடன் கண்டி பிரதேசத்தில் விற்பனை செய்து வந்தததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில்,  இச்சந்தேக நபரை நீண்டகாலமாக பொலிஸார் வலை வீசிப் பிடித்துள்ளனர்.

கைதுசெய்யும்போது சந்தேக நபரிடம் ஒருதொகை போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .