2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க உறுப்பினர்கள் இருவருக்கு கொலை அச்சுறுத்தல்

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரிஃபாத்

ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபையில் தெரிவிக்கப்பட்டது.

மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான சஞ்சீவ கவிரத்ன மற்றும் ரோஹண பண்டார ஆகிய இருவருக்குமே இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபை தவிசாளர் மஹிந்த அபேகோனிடம் குறித்த மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் இந்த கோரிக்கையினை முன்வைத்தனர்.

மத்திய மாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னரே ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவரும் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக சபையில் தெரிவித்தனர்.

கட்சிக்குள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தாம் அச்சமடைந்திருப்பதாகவும் இரண்டு உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர். எனவே மாகாண சபை உறுப்பினர்களான தமக்கு மத்திய மாகாண சபை தவிசாளர் உரிய பாதுகாப்பினை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .