2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின் தாக்கி பெண் மரணம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 26 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு தோட்டத்தில் இடப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டு பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

மத்துரட்ட பொலிஸ் பிரிவிலுள்ள லந்துபிட்ட பிரதேசத்தில் வசித்துவந்த  03 பிள்ளைகளின் தாயான மானெல் குமாரி ஹேரத் (வயது 36) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவர் தனது பயிர்களைப் பாதுகாப்பதற்கு  வழமையாக மின்கம்பியின் மூலம் மின்சாரத்தை பாய்ச்சுவதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாய்ச்சப்பட்ட மின்சாரத்தை துண்டிக்காமல் மின்கம்பியை அகற்றுவதற்கு முற்பட்டபோதே, இவர் மின் தாக்குதலுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .