2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 26 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


விவசாயத்துறையில் புரட்சிகரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்த உலகுடன் நாமும் செயல்படும் திட்டத்தை முன் எடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன  தெரிவித்தார்.

பேராதனை கண்ணணொருவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் 'புதிய தாவர வகைகளின் பாதுகாப்பிற்கான நிறுவனம்' செயலமர்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தச் செயலமர்வில்; இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்,  பூட்டான், பர்மா, மாலைதீவு, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், சிம்பாவே, சுவிஸ்ஸர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

விவசாயத்துறையில் புரட்சிகரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதற்கு உலக நாடுகள் தயாராகும்போது நாமும் அதில் பங்களிப்புச் செய்வது தவிர்க்க முடியாதுள்ளது. இச்செயலமர்வு  மூலம் மரபு ரீதியான உற்பத்தி தவிர்ந்த புதிய கண்டு பிடிப்புக்கள், மரபணுமாற்றம் செய்யப்பட்ட தாவர இனங்கள், எமது பாரம்பரிய தாவர வகைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்கான முடிவுகள் எட்டப்பட உள்ளன. அதனை அறிவுறுத்தும் செயற்பாடும் எமது உள்ளுர் துஇறாசார் அமைப்பினருக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .