Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2015 மே 07 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொயிஸ்டன் நியூட்டன் தோட்டப்பகுதியில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில், இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அந்த வீட்டிலிருந்த 10 பேர் உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை(6) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மரம் வீட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் கிராம சேவகர் மற்றும் தோட்ட அதிகாரியின் அனுமதியை பெற்று மரத்தை வெட்ட முயற்சித்த போது மேற்படி மரம் அந்த இரு வீட்டின் மீதும் விழுந்துள்ளது
எனினும் குறித்த 10 பேரும் வீடுகளுக்கு வெளியே இருந்ததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையெனவும் வீடுகள் இரண்டும் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சேதடைந்த வீட்டை திருத்தி அமைத்துக் கொடுக்கவுள்ளதாக தோட்ட அதிகாரி தமக்கு தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மரத்தை வெட்டும்போது முறையாக வெட்டாததன் காரணத்தினாலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago