2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிள்ளைகள் மீது தீ வைக்க முயன்ற தந்தைக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்

பொகவந்தலாவை, வானகாடு தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்கமுயன்ற தந்தை ஒருவரை வியாழக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதோடு குறித்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பிள்ளைகளின் தாய் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக  வேலை செய்துவரும் நிலையில்,  8 மற்றும் 4 வயதான ஆண் பிள்ளைகள் இருவரும் தந்தையின் பராமறிப்பிலே இருந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அறை ஒன்றுக்குள் தம்மை அழைத்துச் சென்று தாக்கி, மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்கமுயன்றார் என 08வயது சிறுவன் பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளான்.

கடந்த ஒருமாதத்துக்கு முன்னரும் இதேபோன்று இரண்டு சிறுவர்கள் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்க முயற்சி செய்துள்ளார். 

குறித்த நபரை வெள்ளிக்கிழமை (08) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்;படுத்திய போது, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .