2025 ஜூலை 09, புதன்கிழமை

விபத்து: மூவர் படுகாயம்

Kogilavani   / 2015 மே 11 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டர் சைக்களும் ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை ஹட்டன் பிரதான வீதி, நோர்வூட் நியூவெளி பகுதியில் இவ்விபத்து இன்று திங்கட்கிழமை(9) இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்தவர்,  மோட்டார் சைக்கிளின் சாரதி ஆகியோரே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டர் சைக்கிளின் சாரதி பஸ் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாயுள்ளார்.

இவ்விபத்த தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .