Editorial / 2020 மே 20 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
7,000 இளைஞர், யுவதிகள், மரக்கறி லொறிகளில் மலையகத்துக்கு வந்தனர் என்ற விவகாரம் தொடர்பாக விளக்கமளித்து, பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹனவால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு, கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 நெருக்கடி இலங்கையில் ஏற்படட பின்னர், தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தின் போது, கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு 7 ஆயிரம் இளைஞர், யுவதிகள் வந்துள்ளனர் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதை மறுக்கும் வகையிலும், இது தொடர்பில் எவராவது முறையிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்ற தொனியிலும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான எம்.ஏ.எம். நவாஸ், தனியார் வானொலியொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாட்டையடுத்து, இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விசாரணை நடத்தியது.
இந்நிலையியே, பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹனவால் இ.தொ.காவின் தலைவருக்கு அனுப்பியுள்ள விளக்கக் கடித்தில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான எம்.ஏ.எம். நவாஸின் வானொலியூடாக கருத்து, முன் திட்டமிடாமலேயே கூறப்பட்டிருந்தது என்றும் இது தொடர்பாக அவருக்கு ஆக்கபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago