Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
கொரோனா அச்சுறுத்தலையடுத்து தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுவரும் ஊரடங்கு காரணமாகவும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாகவும் சுற்றலூத்துறை நகரமான நீர்கொழும்பு நகரில் சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நீர்கொழம்பு நகரிலுள்ள 95 சதவீதமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதுடன், திறக்கப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மிகக் குறைவான உல்லாசப் பயணிகளே உள்ளனர். சில ஹோட்டல்களில் பத்துக்கும் குறைவான வெளிநாட்டவர்களே தங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது. அவர்களும் ஹோட்டல்களுக்குள் முடங்கியுள்ளனர்.
ஹோட்டல்களில் பணியாளர்களாக பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலா பிரதேசங்களில் தொழில் செய்யும் சிறு தொழில்துறையினரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விமான சேவைகளை முன்னெடுப்பதற்காக விதிக்கப்பட்ட தடை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago