Freelancer / 2022 ஜூன் 18 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முஹம்மது முஸப்பிர், ஜூட் சமந்தா)
தாயினால் களனி ஆற்றில் தள்ளப்பட்டதாகக் கூறப்படும் சிறுவனின் சடலம் வென்னப்புவ - தெற்கு வாய்க்கலை பகுதியில் குவிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி தாய் தனது 05 வயது மகனை களனி ஆற்றில் தள்ளிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சிறுவனின் சடலம் நேற்று 17ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சிகப்பு நிற டீ சேர்ட்டும், கோடுகள் போட்ட கட்டை காற்சட்டையும் அணிந்திருப்பதோடு, காலணியும் அணிந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தனது தாயினால் ஆற்றில் வீசப்பட்ட சிறுவனைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் பிரதேச மக்களுடன் இணைந்து கடந்த 15ம் திகதி முதல் களனி ஆற்றில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சடலம் தற்போது மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026