Princiya Dixci / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் உபகரணங்களையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் மீண்டும் அனுமதி அளித்ததற்கு எதிராக நேற்று திங்கட்கிழமை (01) மீனவர்கள் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நீர்கொழும்பு நகரில் நடத்தினர்.
நீர்கொழும்பு கடற்கரைத் தெரு சாந்த செபஸ்தியன் தேவாலயத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, நகர மத்தியினூக நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக வந்தடைந்து நீர்கொழும்பு - சிலாபம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நீர்கொழும்பு முதல் திருகோணமலை வரையான மீன்பிடிப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு மீன்பிடிப்பது இதற்கு முன்னர் அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது கடற்றொழில் அமைச்சர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக சிறிய மீனினங்;களின் பெருக்கம் குறையும் எனவும், கடற்; தாவரங்கள் அழியும் எனவும், மீன்களின் உற்பத்தி குறைவதாலும் மீன்கள் அதிகளவில் இறப்பதாலும் மீன்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும், சிறியளவில் மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் எனவும், மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் அதற்கு முன்னர் பல தடைவைகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் உரிய பதில் கிடைக்கவில்லை என மீனவ சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.


3 minute ago
5 minute ago
58 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 minute ago
58 minute ago
4 hours ago