2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக இலங்கை மாறும்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிகரமான சமுதாயத்தின் பின்னணி என்பது,  நவீன சமூக இயக்கத்துக்கு தேவையான சமூக செழிப்பு மற்றும் வளமான பொருளாதாரம் என்பனவற்றை உருவாக்குகின்ற  சிறந்த கல்வியிலே தங்கியுள்ளது என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரின் பாரியார் திருமதி சையதா  ஷகீல் கூறினார்.

மேலும், இளம் மாணவர்கள் இலங்கையினை தெற்காசியாவின் அறிவு களஞ்சியமாக மாற்றுவதற்கு   முக்கிய காரணியாக காணப்படுகின்றனர் எனக் கூறினார்.

கொழும்பில் அமைந்துள்ள சிறுவர் பாடசாலை விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில், வெவ்வேறு துறைகளில் பரிசுகளை வென்ற திறமையான மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் திருமதி சையதா ஷகீல் வழங்கி வைத்தார்.

இதன்பொழுது இச்சிறுவர் பாடசாலையின் அதிபர் ஹப்ஸா பஸ்லுல்லா நன்றியுரையினை வழங்கியதுடன் பாடசாலையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X