Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லான்ஸா தலைமையில் நீர்கொழும்பு பிரதி மேயராக தயான் லான்ஸா, நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதி மேயராக இருந்த எம்.எஸ்.எம். சகாவுல்லா, மேல் மாகாண சபை உறுப்பினராக தெரிவானதையடுத்து, மாநகர சபை உறுப்பினர் தயான் லான்ஸா இவ்இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன, மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மாநகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள், சர்வ மதத் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .