Editorial / 2020 ஜூன் 08 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் முன்னர் போன்று மீண்டும் இன்று (08) முதல் மீன் கொள்வனவில் ஈடுபட முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 75 தினங்கள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாதிருந்த நிலையில், சுகாதார வழிமுறைகளுக்கமைய, பொதுமக்கள் மீன்பிடி துறைமுகத்துக்கு வருகைதர முடியும் என அறிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதிகாலை 5 மணி தொடக்கம் 9 மணிவரையான காலப்பகுதியில் மீன் கொள்வனவு செய்ய முடியுமென, துறைமுக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .