Niroshini / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை வேந்தராக நியமித்தமைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு விழாவில் பட்டப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாமல் அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக முகாமைத்துவ மற்றும் நிதி ஆசிரியர் சங்கம் (FMFTA) முன்னதாக அறிக்கையொன்றில் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே மாணவர்கள் சிலர், அவரிடம் பட்டப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளவில்லை.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முழு வைபவத்தில் பங்கேற்கப் போவதில்லை என FMFTA தெரிவித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்றும் (19) நடைபெறுகிறது. இந்த விழா, கடந்த மூன்று நாள்களாக நடைபெறுகின்றனமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025