Menaka Mookandi / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு மாநகர சபை பிரதான கட்டிடத்தின் ஒரு பகுதி கூரை இன்று முற்பகல் 10.15 மணியளவில் உடைந்து வீழ்ந்தது. இதன் காரணமாக நான்கு ஊழியர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் சம்பவத்தை அடுத்து அங்கிருந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் காரணமாக மாநகர சபையின் விநியோகம் மற்றும் சம்பளப் பகுதி அறையின் கூரை முற்று முழுதாக உடைந்து விழுந்துள்ளது. அங்கிருந்த பொருட்கள் பலவும் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு மாநகர சபையின் தீயனைப்பு படைப்பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து உடைந்த கூரைப் பகுதியை அகற்றியதுடன் அங்கிருந்த ஆவணங்களையும் கணனி மற்றும் அலுவலக உபகரணங்களையும் பாதுகாப்பாக அகற்றினர்.
மேற்படி கட்டிடத்தின் கூரைப் பகுதி நீண்ட காலமாகவே சேதமடைந்திருந்ததாகவும் இது தொடர்பாக ஏற்கனவே பல தடைவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் மாநகர சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.


25 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
2 hours ago