2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நீதிமன்ற உத்தரவுக்கமைய 33 சிங்கி இறால்கள் கடலில் விடப்பட்டன

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


தடைசெய்யப்பட்ட மாதங்களில் பிடிக்கப்பட்ட சிங்கி இறால்களை கடலில் விடுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் நீர்கொழும்பு மாவட்ட அலுவலக அதிகாரிகளுக்கு நீர்கொழும்பு  நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் பி.ஏம்.டி.பண்டார செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு, கெபுன்கொடை கடலில்  வலைகள் மூலம் கூண்டில் அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 40,000  ரூபா பெறுமதியான 10 கிலோகிராம் நிறையுடைய 33 சிங்கி இறால்களையே கடலில் விடுவதற்கு உத்தரவிடப்பட்டது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் நீர்கொழும்பு  மாவட்ட அலுவலக உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் பண்டாரவின் ஆலோசனைக்கமைய,   உத்தியோகத்தரான கடற்றொழில்வள  உதவி முகாமையாளர் லசந்த வீரவர்தன, பிரதேச கடற்றொழில் பரிசோதகர்களான ரி.சி.நாணயக்கார, யூட் பெரேரா, துசித்த மாரசிங்க ஆகியோர்  கெபுன்கொடை கடலில் தேடுதல் நடத்தி 33 சிங்கி இறால்களை   செவ்வாய்க்கிழமை (25) கைப்பற்றியிருந்தனர்.

சிங்கி இறால்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பெப்ரவரி, செப்டெம்பர், ஒக்டோபர் ஆகிய மாதங்களில் அவைகளை பிடிப்பதற்கு  தடைசெய்யப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவை அடுத்து, சிங்கி இறால்கள் படகொன்றில் கொண்டு செல்லப்பட்டு    தூவ பிரதேசத்தின்  ஆழமான கடலில்  விடப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X