Menaka Mookandi / 2011 ஜூன் 24 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்எம்.பௌஸான்)
'எமது அஹதியாவை வளப்படுத்துவோம்' என்ற தலைப்பில் மல்வானை அஹதியா நிறுவனம் கம்பஹா மாவட்ட அஹதியா சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப்பயிற்சி முகாம் இன்று மல்வானை அல்முபாரக் தேசிய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
மல்வானை அஹதியா நிறுவனத்தின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.லாபிர் (கபூரி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட அஹதியாப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 300 ஆசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இவர்களுக்கான உணவு வதிவிடம் மற்றும் உட்கட்டமைப்பு சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இதன் செயளாலர் ஏ.எப்.எம். மபாஸ் தெரிவித்தார்.
இப்பயிற்சி முகாமின்போது விசேட சொற்பொழிவாளர்களாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஹில்மி மொஹமட் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம்.பளீல் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் எம்.எம்.எம் முபாரக் (கபூரி) மேல் நீதிமன்ற நீதிபதிகளான எம்.எம்.ஏ.கபூர் மற்றும் லபர் தாஹிர் ஆகியோரும் கலந்து சொற்பொழிவாற்றவுள்ளனர்.
33 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago