Super User / 2011 ஜூன் 27 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(றிப்தி அலி)
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் மலேஷியாவின் முகாமைத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்திற்கினங்க இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் மாணவர் மற்றும் விரிவுரையாளர் பரிமாற்றம், கூட்டு ஆய்வு நடவடிக்கைகள், பாடத்திட்டம் மற்றும் பாட புத்தகங்கள் பரிமாற்றம், கலாநிதி கற்கை நெறிகள் மேற்கொள்ளல் மற்றும் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு உதவுதல் போன்ற இடம்பெறவுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரேகமவும் மலேஷியாவின் முகாமைத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் மொஹ்ட் சுக்ரி அப் யெஜித்தும் கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு பல்கலைக்கழகங்களும் விருத்தியடைவதுடன் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் தரத்தையும் அதிகரிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழக உப வேந்தர் போராசிரியர் ஷானிகா ஹிரும்புறுகம தெரிவித்தார்.
உலக மயமாக்கத்திற்கு ஏற்ற வகையில் பல புதிய கற்கை நெறிகளை கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.



49 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago