Super User / 2011 ஜூலை 06 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
"வாக்காளர் இடாப்பில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் கிடைத்திராதவர்கள் விசேட படிவங்களை பயன்படுத்தி 2011ஆம் வருட இடாப்பில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த விசேட படிவங்கள் விரைவில் விநியோகிக்கப்படும்" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன், கம்பஹா மாவட்ட அமைப்பாளர் ஜெரோம் விக்ணேஷ்வரன் ஆகியோருடன் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் ஜ.ம.மு. விடுத்துள்ள செய்தி குறிப்பில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2011ஆம் வருடத்திற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை கிராம சேவகர்களும், தேர்தல் திணைக்கள முகவர்களும் வீடு, வீடாக விநியோகம் செய்து வருகின்றார்கள். பல இடங்களில் விநியோகிக்கப்பட்ட படிவங்கள் நிரப்பப்பட்டு மீளவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் விண்ணப்பப்படிவங்கள் கிடைத்திராதவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்வதற்காக விசேட மாதிரி படிவங்களை தேர்தல் திணைக்களம் வெளியிடவுள்ளது. இப்படிவங்களை நிரப்பி தேர்தல் ஆணையாளருக்கு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக கிடைக்கச் செய்வதன் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்வதற்கான சந்தர்ப்பம், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும். இந்த அவகாசம் செப்டம்பர் மாதம் 15ம் திகதி வரை நீடிக்கப்படும்.
வடக்கு கிழக்கில் இருந்தும், மலையகத்திலிருந்தும் கொழும்பிற்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்களது பழைய இருப்பிடத்தை சார்ந்த கிராமசேவர்களிடமிருந்து கடிதங்கள் பெற்றுக்கொண்டுவர தேவையில்லை. இதுதொடர்பாக சத்திய கடதாசி ஒன்றை தேர்தல் ஆணையாளருக்கு வழங்குவதன் மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்படும். இந்த சத்தியக்கடதாசியின் மாதிரிப்படிவம் விரைவில் விநியோகிக்கப்படும்.
2011ஆம் வருடத்தின் வாக்காளர் பதிவுகள் தொடர்பில் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் கொழும்பு, தெகிவளை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் வசிக்கின்ற தகைமையுள்ளவர்கள் தொடர்பாக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இவை தொடர்பாக தேர்தல் அதிகாரிகளை உள்ளடக்கிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.
அதேவேளையில் வடகொழும்பு, மத்திய கொழும்பு, பொரளை, கொழும்பு மேற்கு, கொழும்பு கிழக்கு, தெகிவளை, அவிசாவளை, கொலொன்னாவை, மொரட்டுவை ஆகிய தொகுதிகளுக்கான 2010ம் வருட வாக்காளர் இடாப்புகள், தமிழ் மொழியில் பிரசுரிக்கப்பட்டு பிரதேச செயலகங்களிலும், கிராமசேவகர் அலுவலகங்களிலும், தேர்தல் செயலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்காக ஜுலை மாதம் 15ஆம் திகதியிலிருந்து வைக்கப்படும்.
35 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago