Super User / 2011 ஜூலை 14 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் என்று அழைக்கப்படும் முஸ்லிம் மாணவர் ஒன்றியம் திஹாரி அங்கவீனர் பாடசாலைக்கு 50,000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களை கையளித்தனர்.
முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் சமூக நலன்புரி செயற்பாட்டின் கீழே கற்றல் உபகரணங்களுக்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல உதவிகளை திஹாரி அங்கவீனர் பாடசாலைக்கு மாணவர் ஒன்றியத்தினர் வழங்கவுள்ளனர்.
திஹாரி அங்கவீனர் பாடசாலையில் இன மற்றும் மத வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக கல்வி கற்பதை இனங்கண்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினர் உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கு தேவையான அத்தியவசிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.
34 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago
Ullam Thursday, 21 July 2011 08:33 PM
நன்றி....
Reply : 0 0
Hassan Friday, 29 July 2011 10:07 AM
சிறு தொகை என்றாலும் மற்றவர்களுக்கு இது ஒரு முன்னுதாரணம். அல்ஹம்துலில்லாஹ் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago