Super User / 2011 ஜூலை 19 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
பாதுகாப்பு நெருக்கடிகள் குறைந்துள்ளமையினால் கொழும்பின் பல வீதிகளில், இரவு நேர காரோட்ட போட்டிகள் நடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிகளில் செல்வோருக்கு ஆபத்துக்களை விளைவிக்க கூடிய இந்த போட்டிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான கார் ஓட்டப் போட்டிகள் கொழும்பு கடற் கரையோர வீதியிலேயே அதிகமாக இடம்பெறுவதால் இந்த பகுதியை பொலிஸ் தீவிரமாக கண்காணிக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஓட்டப் போட்டிகளை நடத்தக்கூடிய இடங்கள் உள்ளன. அங்கு கூட பொலிஸ் அனுமதியின்றி போட்டிகளை நடத்த முடியாது. இவ்வாறான கார் ஓட்ட போட்டிகள் பற்றி பொதுமக்கள் 119 இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிடலாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 3,500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடற்கரையோர வீதியில் கடந்த வார இறுதியில் மணிக்கு 150 கிலோமீற்றரிலும் கூடிய கதியில் வாகனம் செலுத்தியவர்களின் நான்கு மோட்டார் சைக்கிள்களும் இரண்டு கார்களும் பம்பலப்பிட்டி பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
35 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago