Kogilavani / 2011 ஜூலை 19 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
விகாரமாதேவி பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மலர் வியாபாரிகள் விரைவில் வோட்டர் எஜ்ச் வளாகத்தில் தமது மலர்செடிகளை காட்சிப்படுத்துவதற்கான அனுமதியை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.
ஜுலை 1 ஆம் திகதி மலர்ச்செடி வியாபாரிகள் சகலரும் விகாரமாதேவி பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த பூங்காவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறி இவர்களை பாதுகாப்பு அமைச்சு வெளியேற்றியது என மலர்ச்செடி வளர்ப்பாளர் சங்க ஏற்பாட்டாளர் சந்தன டி சில்வா கூறினார்.
இந்நிலையில், புதிய இடத்தில் மலர்ச் செடிகளை காட்சிப்படுத்துவற்கான ஏற்பாடுகளை நகர அபிவிருந்தி அதிகார சபையும் வோட்டர் எஜ்ச் முகாமைத்துவமும் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் சந்தையில் 80 கடைகள் இருக்கும்.
மலர்ச் செடிகளை காட்சிப்படுத்தும் வசதிகள் தற்போது இல்லாது இருப்பதால் மலர்ச்செடி வளர்ப்பாளர் பலர் வேலையிழந்துள்ளதாக சந்தன சில்வா கூறினார்.
இலங்கையில் 75,000 மலர் பயிர்ச் செய்வோர் உள்ளனர். 400 பேர் வரையில் இந்த வணிகத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago