Super User / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
மோதரை பிரதேசத்தில் வைத்து கடந்த புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட மீன் வர்த்தகர் நேற்று வியாழக்கிழமை இரவு தொட்டலங்க பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை தொட்டலங்க பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் இரவு 8.30 மணியளிவில் பிரதேவாசிகள் கண்டுள்ளனர். இதனையடுத்து கிரேண்ட்பாஸ் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
36 வயதான ராஜேந்திரன் முரளிதரன் என்பவரே கொல்லப்பட்டவர் என இனங்காணப்பட்டுள்ளார். இவர் முச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற போது, மோதரை – பெர்ணான்டோ மாவத்தையில் வைத்து கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட மற்றும் நீண்ட கால பகையே இக்கொலைக்கு காரணம் என கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் ஒறுகொடவத்தை பிரதேசத்தில் இராணுவ பாணியில் சீருடை அணிந்தவர்களால் கடத்தப்பட்ட மீன் வர்த்தகர், கடத்தப்பட்டவர்களால் தாக்கப்பட்டு கொள்ளையடித்த பின் வீடு வந்து சேர்ந்தார்.
26 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
2 hours ago