Super User / 2012 ஜனவரி 04 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை கிராண்ட்பாஸிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கிரான்ட்பாஸ் பேர்குசன் வீதியில் இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
இந்நபர் 26 வயதான தினேஷ் புத்திக என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் போதைப்பொருள் வர்த்தகரான 'சங்கர்' என்பவருடன் இணைந்து செயற்பட்டதாக கூறப்படுகிறது.
தினேஷ் புத்திக கடத்தப்பட்டமை குறித்து அவரின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இன்று அவர் சடலத்தை அடையாளம் காட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்தவாரம் முகத்துவாரம் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட மீன் வியாபாரி ஒருவர் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
2 hours ago