2026 மார்ச் 19, வியாழக்கிழமை

நீர்கொழும்பு நகைக்கடையில் ஒரு கோடி ரூபா கொள்ளை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று நிலையங்களில் சுமார் ஒரு கோடி ரூபா பணம், துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள கொள்ளையர்கள் சிலரே இந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, ஹெல்மட் மற்றும் ஜாக்கட் அணிந்த இரண்டு பேர் கடையில் நுழைந்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரது தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி பணத்தை கேட்டுள்ளார்.

மற்றைய நபர் பணத்தை எடுத்து பையொன்றில் போட்டுள்ளார். அதன் பின்னர் இரண்டு நபர்களும் அங்கிருந்து வெளியேறி கடைக்கு சற்று தூரத்தில் தயாராக  இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தகவலளித்த கடை ஊழியர் ஒருவர், 'ஹெல்மட் மற்றும் ஜாக்கட் அணிந்த இரண்டு பேர் கடை உரிமையாளரிடம் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கடையில் இருந்த டொலர் மற்றும் உள்நாட்டு நாணயங்கள் அடங்கலாக ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையிட்டு சென்றனர். அவர்கள் முழுமையாக மூடப்பட்ட ஹெல்மட் அணிந்திருந்ததால் முகத்தை பார்க்க முடியவில்லை' என்றார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சஜித் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X