2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க வேட்பாளர் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு நகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் நீர்கொழும்பு தொகுதியின் பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபையின் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி  வேட்பாளருமான ரொயி விஜித்த பெர்னண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு நகரில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற சுமார் 15 மில்லியன் ரூபா கொள்ளை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்து வந்தவர்களே இந்த கொள்ளைச்சம்பவத்தை ஈடுபட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் நேற்றைய தினம் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களை அடுத்தே பிரதான சந்தேகநபரான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .