2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

'சனச' கூட்டுறவு  வங்கியில்  86 இலட்சத்து 51 ஆயிரத்து 736 ரூபாவை  மோசடி செய்ததாகக் கூறப்படும் அவ்வங்கியின் முகாமையாளரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு   பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க  செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.

ஜா-எல நிவன்தம பிரதேசத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியான்சலாகே நாலனி குலரத்ன (வயது 55) என்பவருக்கே  விளக்கமறியல் வழங்கப்பட்டது.

சந்தேக நபர் வைப்பாளர்களின் பணத்தை கையாடல் செய்ததுடன், அடகு வைக்கப்பட்ட நகைகளையும் போலி கையொப்பமிட்டு மீட்டு விற்றுள்ளார்.

2008.09.10 முதல் 2013.05.13வரை சந்தேக நபர் இந்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X