2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம், நகை கொள்ளை

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.ஷாஜஹான்


நீர்கொழும்பிலுள்ள நகைகடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையம் என்பவற்றில் வியாழக்கிழமை(17) இரவு கொள்ளளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகை என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மோட்டார்; சைக்கிள்களில் வந்த ஆறுபேரை கொண்ட குழு இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவததில் ரி.56 ரக துப்பாக்கிகள் இரண்டும் ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடைக்கு வெளியே துப்பாக்கிச் சன்னங்கள் மூன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன.

சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு  வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் பல்வேறுகோணங்களில் விசாரணைகள் முடுக்கவிடப்பட்டுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X