2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'ஜுவெல் லங்கா' நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அப்பல் ருவனிடமே உள்ளது

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள நகை கடையில் கடந்த பெப்ரவரி மாதம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்  சந்தேக நபர்களில் ஒருவரான எப்பல் ருவனிடமே உள்ளது என்று பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன தெரிவித்தார்.

நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில்  நகர பாதுகாப்புக்காக  அமைக்கப்பட்டுள்ள விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவினை    சனிக்கிழமை (10) காலை 8.30 மணியளவில்  திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.

 பிரதான பஸ் நிலையத்தின் இரண்டாவது மாடியில்  விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவு  திறந்து வைக்கப்பட்டது.

 பிரதி அமைச்சர் தொடர்நது உரையாற்றுகையில் கூறியதாவது,

நகருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளின் பொறுப்பும் கடமையுமாகும். ஜுவெல் லங்கா  நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகரில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். நகர பாதுகாப்புக்கு  அமைக்கப்பட்டுள்ள  விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவுக்கு பருந்து ஒன்று,  பருந்து இரண்டு என்ற பெயர்களில்  இரண்டு வானங்களில்  ஆயுதம் தாங்கிய  இரண்டு பொலிஸ் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு கொழும்மைப் போன்று  பல நிதி நிறுவனங்களையும் வர்த்தக நிலையங்களையும் கொண்ட நகரமாகும். வர்த்தகர்கள் பாதுகாக்கப்பட்டால்தான் நகரம் அபிவிருத்தி அடையும். கொள்ளைச் சந்தேக நபரான எப்பல் ருவன் தொடர்பாக தகவல்கள்  தெரிந்தால்  பொது மக்கள் பொலிஸாருக்கு  அறிவிக்க முடியும். ரகசியம் பாதுகாக்கப்படும்.

அதேபோன்று, பிரதேசத்தில் போதைப் பொருள்  விற்பனை செய்வோர் மற்றும் பாவிப்போர் தொடர்பாகவும்  இந்த பிரிவிற்கு தகவல்களை வழங்க முடியும். நீர்கொழும்பு நகர பாதுகாப்புக்காக சிசிரிவி கமராக்களை பொருத்துவதற்கு எடுத்த முடிவு தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை கவலைக்குரியது என்றார்.

இந்நகழ்வில் விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசம்பத் ரணசிங்க, நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர, பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே ஆகியோரும்  உரை நிகழ்த்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X