2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவு திறந்து வைப்பு

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு நகர பாதுகாப்புக்கு  விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவு நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்தின் இரண்டாம் மாடியில் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்னவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர, நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே, விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசம்பத் ரணசிங்க, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ, வர்த்தகர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் பங்கு பற்றினர்.
 
விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவு  திறந்து வைக்கப்பட்டதை அடுத்து  பிரதான பஸ் நிலையம் முன்பாக வைபவம் ஒன்றும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கினர். அதன பின்னர்  பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசம்பத் ரணசிங்க, நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர, பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே ஆகியோர் அங்கு உரை நிகழத்தினர்.

நகர பாதுகாப்புக்கு  அமைக்கப்பட்டுள்ள  விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவுக்கு பருந்து 1, பருந்து 2 என்ற பெயர்களில்  இரண்டு வேன்கள்  ஆயுதம் தாங்கிய  இரண்டு பொலிஸ் குழுவினருடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. , 0315708090 (விஷேட பொலிஸ் நடவடிக்கை பிரிவு) , 0315708091 , 0315708092 (பொலிஸ் அவசர வாகன அழைப்புச் சேவை)  ஆகிய  தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி நகரில் ஏற்படும் எந்தவொரு ஆபத்து நிலைமை தொடர்பாகவும் அறிவிக்கலாம் என அங்கு அறிவிக்கப்பட்டது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X