2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பாம்பு தீண்டி குடும்பஸ்த்தர் மரணம்

A.P.Mathan   / 2014 மே 15 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

புடையன் பாம்பு தீண்டி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று (15) காலை மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெலிஹேன, கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மதுரசிங்க ஆராச்சிகே டியூட்டர் பெர்னாந்து என்ற 60 வயது நபரே பாம்பு தீண்டியதில் மரணத்தைத் தழுவிக் கொண்டவராவார்.

மரணமடைந்த நபரின் வீட்டுத் தோட்டத்தில் இன்று காலை தேங்காய் பறித்துள்ளனர். தேங்காய்களை சேகரிக்கச் சென்றபோதே புடையன் பாம்பு தீண்டி இறந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X