2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பள்ளிவாயலை மீள நிர்மாணித்து தருவதாக உறுதி

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்     


அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களில் சேதமடைந்துள்ள பள்ளிவாயலை மீள நிர்மாணித்து தருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுவிட்டு செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய அமைச்சர், நேரடியாக அளுத்கம மற்றும் தர்கா நகர் பேருவலை போன்ற பிரதேசங்களுக்கு விஜயம்செய்து சேதமடைந்த வீடுகள் மற்றும் பள்ளிவாயல்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றை பார்வையிட்டார்.

இதன்போது முற்றாக சேதமாக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலை இரண்டு மாடிக்கட்டிடமாக மீள நிர்மாணித்து தருவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதன்போது பள்ளிவாயல் நிர்வாகிகளிடத்தில் உறுதியளித்தார்.

இச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்ற பிரதியமைச்சர், அக்குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாவினை வழங்கி வைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X