2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பொது பல சேனாவை தடைசெய்யவும்: ரிஷாட்

Kanagaraj   / 2014 ஜூன் 19 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இனவாதம் மற்றும் மதங்கள் தொடர்பில் பேசுபவர்களுக்கு எதிராக புதிய சட்டமொன்று உடனடியாக   அமுலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன் அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசாங்கம் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும், அதுமட்டுமன்றி பொது பல சேனா அமைப்பை உடனடியாக தடை செய்யப்படவேண்டும், என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழியுறுத்தியுள்ளார்.

சவூதிக்கு சென்றிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு செவ்வாய்க்கிழமை நாடு திரும்பி பேருவளைக்கு விஜயம் செய்தார்.

அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்து பேருவளை அல்-ஹுமைசரா மத்திய கல்லூரியில் தஞ்சமடைந்துள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அங்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரனைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் தொடர்பில் அரச உயர் தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளேன்.

பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைகளும் சொத்து அழிவுகளுக்கும் பொது பலசேனாவின் ஞானசார தேரர் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வேதனையும் வெட்;கமும் அடைகிறேன். அளுத்கமை மற்றும் பேருவளை பிரச்சினைக்கு இந்நாட்டில் தீர்வு கிடைக்காவிடின் சர்வதேசத்தை நாடவும் பின்னிக்கப்  போவதில்லை.

ஞானசார தேரர் ஒரு மிகப்பெரும் பயங்கரவாதி. பொது பலசேனாவை தடைசெய்வதற்கும், ஞானசார தேரரை
கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்று பட்டு கோஷமெழுப்ப முன்வர வேண்டும்.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை  அழிப்பதே பொது பலசேனாவின் ஒரே இலக்கு. நான் சவூதியில்  இருந்தபோது அங்கு வாழும் நூற்றுக்கணக்கான பேர் ஒன்று பட்டு இந்த பொது பலசேனாவை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தி கேட்டனர்.

இந்த பாசிச  பொது பலசேனாவின் சதியை முடிவுக்கு கொண்டுவர முஸ்லிம்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக. அத்துடன் இப்பாடசாலையில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்த மக்களை அவர்களுக்கான அச்சுறுத்தல் நீங்கும் வரை பலவந்தமாக இங்கிருந்து வெளியேற்ற   அனுமத்திக்கப்போவதில்லை.

அளுத்கமை, தர்கா நகர், பேருவள முஸ்லிம்கள் மீது இனவெறிபிடித்த காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்தையும் பாதிக்கப்பட்ட மக்களையும்  நேரடியாகச் சென்று பார்தேன். இவ்வாறான நாசகார செயல்களை செய்த பௌத்த தீவிரவாத அமைப்புக்கு எனது கண்டனத்தையும்   தெரிவிக்கின்றேன்.

எந்தளவுக்கு மிகவும் கேவலமாக இறங்கி முஸ்லிம்களையும் அவர்களது வர்த்தகத்தையும் அழிக்க முடியுமோ அந்தளவுக்கு இனவெறியர்கள் கீழிறங்கியிருப்பதை என்னால் அங்கு உணர முடிந்தது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதலினால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள், சொத்தளிப்புக்கள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இயல்பு வாழ்க்கையினை மீள கொண்டு வருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அரச உயர் தரப்பினர்pடம் வலியுறுத்தியுள்ளேன்.

முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சம்பவங்களும் அனைத்தும் பொலிஸார் பார்த்தக் கொண்டிருக்கும்போதே இடம்பெற்றுள்ளன. எனினும் இவர்களில் ஒருவரேனும் இதுவரை கைதுசெய்யப்படாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது. 

ஜூன் 15ஆம் திகதி பொதுபல சேனா அமைப்பின் உரைகளின் பிரதிபலனாகவே இனவாதம் தூண்டப்பட்டு  மிலேச்சத்தனமான தாக்குதல் தொடரப்பட்டடுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X