2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு தயாராகும் பெண்களை நிர்வாணமாக படம்பிடித்த பெண் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 06 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு தயாராகும் பெண்களை தனது செல்லிடத் தொலைபேசியால் இரகசியமான முறையில் நிர்வாணப் படம்பிடித்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, தலாதூவ, கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையின் மூன்றாம் வார்டின் அறையொன்றில் ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு செல்வதற்காக தயாராகும் பெண்கள் தமது ஆடைகளை களையும் போது, சந்தேகநபரான குறித்த பெண் தனது செல்லிடத் தொலைபேசியால் படம்பிடித்துள்ளார்.

இதனை கண்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை பொலிஸார்  குறித்த பெண்ணை பரிசோதித்த போது அவரின் செல்லிடத் தொலைபேசியில் சில பெண்கள் மேலாடையின்றி இருக்கும் படங்கள் இருந்துள்ளன.

இதனை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் தான் படம் பிடித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X