2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டியில் லீலை: மூன்று ஜோடி மாணவர்கள் கைது

Super User   / 2014 ஜூலை 06 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.இஸட்.ஷாஜஹான்

முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் அநாகரிகமான முறையில்  நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர்கள் அறுவர் உட்பட முச்சக்கர வண்டி சாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த முச்சக்கர வண்டியினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீர்கொழும்பு கல்விக் கோட்டத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுகளையுடைய  மூன்று ஜோடி மாணவர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடோல்கலே பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் முச்சக்கர வண்டியில் வைத்து ஜோடியாக இருந்து காதல் லீலையில் ஈடுபட்டுள்ள போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த முச்சக்கர வண்டியை ஒரு மணித்தியாலத்திற்கு 300 ரூபா வாடகைக்கு  அமர்த்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் அறநெறி பாடசாலைக்கு செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்து விட்டு  வந்து காதல் லீலையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளிக் போது தெரிய வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X