2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ரொயிஸ் விஜித்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 02 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற  கொள்ளை சம்பவம் தொடர்பாக  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை  எதிர்வரும் 17ஆம் திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்பட்ட போதே 
17ஆம் திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .