2021 ஜூலை 29, வியாழக்கிழமை

கால்பந்தாட்டப் போட்டியில் கைகலப்பு; 10க்கும் அதிகமானவர்கள் காயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இளவாலையில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட கைகலப்பில் பத்துக்கும்  மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அத்துடன், பொலிஸ் வாகனமொன்றும்  தனியார் மினிபஸ்சும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இளவாலை யங் ஹென்றீஸ் விளையாட்டுக்கழகம் யாழ.; மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடத்திய கால்பந்தாட்டப் போட்டி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் இடம்பெற்றது

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையிலேயே  கால்பந்தாட்டப்போட்டி இடம்பெற்றது. இதன்போது,  விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது.   கற்களால்  வீசி தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தடிகள் மற்றும் பொல்லுகள் சகிதம்  இரு பகுதியினரும் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த இளவாலைப் பொலிஸார், மோதலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது பொலிஸாரின் வாகனத்தின் மீதும் கற்களால் வீசி தாக்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களெனக் கருதப்படும்  ஜந்து பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .