2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி அந்த இடத்திலேயே பலியானார்.

தென்மராட்சி நுணாவில்குளம் கண்ணகை அம்மன் கோயிலடியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இ.செந்தில்பிரகாஷ் (வயது 29) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவரது சடலம் சாவகச்சேரி பொலிஸாரால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .