2025 மே 03, சனிக்கிழமை

அண்ணன் செய்த மோசமான செயலால் தங்கை தற்கொலை

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர்  மனவிரக்திக்கு உள்ளாகிய  தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X