2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அத்துமீறும் மீனவர்களை நாமே கைது செய்வோம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

வடபகுதி கடலுக்குள் அத்துமீறலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் அரசாங்கம் கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் பாரியளவு முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மாத்திமல்லாது, எல்லைத்தாண்டும் மீனவர்களை கைது செய்து கடற்படையினரிடம் ஒப்படைக்கவும் நாம் தயாராகவுள்ளோம் என்று  யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

'எம்மால் எதனையும் சாதிக்க முடியும் எனக்காட்டியுள்ளோம். எப்போதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. சர்வதேச கடற்பரப்பில் எல்லைகளுக்கான வரையறைகள் உண்டு. ஆனால்,  இந்திய மீனவர்களை எல்லைகளை மீறுகின்றனர்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது, தாங்கள் கச்சதீவில் மீன்பிடிப்பதாக பசப்பு வார்த்தைகளை கூறுகின்றனர். அதனை எவ்வாறு ஏற்கமுடியும்.

அரசாங்கத்துக்கு அரசாங்கம் உதவிகள் செய்வது சாதாரணம். இந்திய அரசாங்கம் இலங்கையில் ரயில் பாதை, பாலங்கள் அமைக்கலாம். அதில் நாங்கள் பயணிப்போம். அதற்காக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதை ஏற்கமுடியாது.

இலங்கை, இந்திய அரசுகள் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .