Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று சனிக்கிழமை (20) விஜயம் செய்தார்.
கொழும்பு - யாழ்ப்பாணம் ரயில் சேவை மூலம், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் ரயில் நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை - கொழும்பு ரயில் சேவையை மேம்படுத்துவது, மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.
அத்துடன், இரவு நேர தபால் சேவையின் மீள் ஆரம்பம், அறிவியல் நகர், சாவகச்சேரி நிலையங்களில் உத்தரதேவி ரயில் சேவை தரித்தல் என இந்தச் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அமைச்சர் அறிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago