Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் - 02 நிகழ்வு, நாளை முதல் 23ஆம் திகதி வரை இரவு 7 மணிக்கு, புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கமைய, நாளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறை முன்னாள் விரிவுரையாளர் க.ஆதவன் (டென்மார்க் ) 'புலம்பெயர் நாடகப் பயணங்கள்' எனும் தலைப்பிலும் நாளைமறுதினம் (21), உதவிப் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா (தமிழ்நாடு, இந்தியா) 'தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு - இசைநாடக உறவும் தொடர்ச்சியும்' எனும் தலைப்பிலும், புதன்கிழமை (22), முனைவர் ஆ.அழகுசெல்வம் (அழகுபாரதி) (தமிழ்நாடு, இந்தியா) 'மக்களுக்கான மக்கள் நாடகம்' எனும் தலைப்பிலும், வியாழக்கிழமை (23) பேராசிரியர் அ. இராமசாமி (தமிழ்நாடு, இந்தியா) 'நாடகப்பனுவல்கள் மேற்கும் கிழக்கும்' எனும் தலைப்பிலும் கதையாடவுள்ளனர்.
இந்த இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் கலந்துகொள்ள ஆர்வமுடையவர்கள், சூம் செயலி இலக்கம் 647334 8261, கடவுச்சொல்: ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு, புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
9 minute ago
50 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
50 minute ago
2 hours ago
4 hours ago