2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆலயத்திற்கு மேல் குடைசாய்ந்த அரசமரம்

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழில் உள்ள ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு, சங்கானை - வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று திங்கட்கிழமை (13) இரவு  தொடர்ந்து பெய்த மழையால் குடைசாய்ந்து விழுந்துள்ளது.

இப்பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகில் இருந்த மரமே இவ்வாறு விழுந்துள்ளது. இதனால் ஆலயத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X