Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மே 09 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த இயந்திரத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இயந்திரம் போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரமாகும்.
1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 8 மணியளவில் வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளை இளைஞன் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
பளை பகுதியில் வைத்து கடந்த வாரம் ஒருவர் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார். அவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டவருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (09) முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணைகளை குற்ற விசாரணைப் பிரிவுக்கு (சிஐடி) மாற்ற அனுமதியளித்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தின் கட்டளையில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.
6 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
50 minute ago