Freelancer / 2022 ஜூன் 27 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போவதாக மன்னார் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் காணப்படுகின்ற அரசியல் ஸ்திரமற்ற நிலை, எரிபொருள் தட்டுப்பாடு இதேபோல் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரம், அதானி குரூப் எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள், அத்தோடு கனியவள மண் அகழ்வு என மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சமகாலத்தில் பல உள்ளன.
கடந்த வியாழக்கிழமை ஒரு இந்திய குழு மன்னார் மாவட்டத்தில் அதானி குரூப் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது.
வடபகுதியில் வளங்களை பாவிப்போம் என்பது இந்தியாவின் குறிக்கோளாகக் காணப்படுகிறது.
ஆனால் தற்பொழுது இலங்கையில் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த இலங்கை அரசுக்கு தெரியவில்லை.
காலத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படாமையினால் நாடு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டடிருக்கிறது.
அதானி என்பவர் இந்தியாவில் பாரியபணம் படைத்த ஒரு பெரிய தொழிலதிபர். அங்கே அவருக்கு நிறைய பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவரைக் கொண்டு வந்து வடபகுதியை விற்க போகின்றார்கள். நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதாக கூறி திட்டங்களை நடைமுறைப்படுத்திஇந்தியாவுக்கு வடபகுதியினை விற்க போகின்றார் என்றார். (R)
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago